தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பெறுவது
- விடுதியில் தங்கினால் பராமரிப்பு செலவாக மாதம் ரூபாய் 1,600ம், தினசரி வருபவர் என்றால் மாதம் ரூபாய் 750ம்.
- ஆண்டிற்கு ரூபாய் 4,000 ஊனமுற்றோர் கொடுப்பனவாக வழங்கப்படும்.
- திரும்பப் பெறத்தக்க பாதுகாப்பு வைப்பு, எச்சரிக்கை வைப்பு நீங்கலாக கட்டாயமாக திரும்பப்பெறமுடியாத தொகையில் 1.5 லட்சம் வரை ஈடு செய்து கொள்ளலாம்.
4.மேற்படிப்பை தொடர புத்தகம் வாங்குவதற்கு மட்டும் ஆண்டு தோறும் ரூபாய் 1500ம், பதினோராம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு கற்கும் காலம் வரை மாணவர் இறந்தால் ரூபாய் 10,000ம் வழங்கப்படும்.
உதவித்தொகைக்கான தகுதி
- அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியம் அல்லது பல்கலைகழகம் வழங்கியப் பத்தாம் வகுப்பு சான்றோ, பனிரேண்டாம் வகுப்போ, அதற்கு மேலாகவோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- முறையான அதிகாரியால் வழங்கப்பட்ட 40% உடல் ஊனத்திற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பத்தாம் வகுப்பிற்கு மேலான கல்வியை மேற்கொண்டிருக்க வேண்டும் (பதினோராம் முதல் பட்டமேற்படிப்பு வரை).